முதல் நாள் அன்று:
கடந்த வாழ்க்கையில் கரைந்த முதல் நாள் ஒன்று….
பாதை பார்த்து சென்ற நான் அவன் பாதம் பார்த்து செல்ல தொடங்கினேன்…
அன்றோ நான் கேட்டதெல்லாம் அவன் பேச்சு,சுவாசித்ததெல்லாம் அவன் மூச்சு…
காற்றோடு கரைந்தது நேரம் மட்டுமல்ல நானும் தான்…..
உலகை சுற்றும் தூசியை போல் அவனோடு சுற்றினேன்…
காலையும் ,மாலையும் கரைந்தது….நிலவும் , இரவும் நிறைந்தது.…
சற்றேன்று மாறும் வானிலை போல்……
மாறினான் அவன்…
கையில் பூ கொண்டு….
கண்ணில் காதல் கொண்டு…..
நெஞ்சில் என்னைக்கொண்டு…
மண்டியிட்டு பார்த்தான் என்னை…
மயங்கியது பெண்மை மலர்ந்தது காதல்…….
என் 20 ஆண்டு தனிமை 20 நொடிகளில் முடங்கியது…
ஓடத்தில் ஓடும் படகாய் அவனோடு ஓட தொடங்கிய முதல் நாள் அன்று……..
கைவண்ணம்-சந்தியா